எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா கடலூர், சிதம்பரம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா கடலூர், சிதம்பரம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நகரச் செயலர் ஆர்.குமாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைச் செயலர் சீனுவாசராஜா, எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜே.குமார், தொழில்சங்க மாவட்டச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய அணி மாவட்டச் செயலர் காசிநாதன், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, நகர துணைச் செயலர் வி.கந்தன், நகர அவைத் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் ராம.பழனிச்சாமி,  நகர நிர்வாகிகள் செல்வி வேல்முருகன், ஆர்.வி.மணி, தமிழ்ச்செல்வன், வெங்கட்ராமன், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகரச் செயலர் தங்க.வினோத்ராஜ் தலைமையில், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மருத்துவரணி மாநில நிர்வாகி ராஜாபழனிவேல், மீனவரணிச் செயலர் கலைமாறன், சிறுபான்மை அணிச்செயலர் பாஷா, நகர துணைச் செயலர்கள் சீனுவாசன், சலிம் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம்
கடலூர் மேற்கு மாவட்டம், சிதம்பரம் நகர அதிமுக சார்பில், சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்டக் கழக அவைத் தலைவர் எம்எஸ்என்.குமார், ஒன்றியச் செயலாளர்கள் அசோகன், சிவப்பிரகாசம், ஜெயபால், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி. முருகேசன், நகர  அவைத் தலைவர் தில்லை சேகர், தலைமைக் கழக பேச்சாளர் தில்லை கோபி, தேன்மொழி காத்தவராயசாமி, பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் முருகையன், ராசாங்கம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் விநாயகம், நகர நிர்வாகிகள் கே.நாகராஜன், புவனேஸ்வரி, பாரிவள்ளல், ஏசுராஜ், கருப்பு ராஜா,  முத்து, சுந்தரமூர்த்தி செல்வராஜ், மாணவரணி சங்கர், கார்த்திகேயன், சந்திர ராமஜெயம், ராஜ்மோகன், செழியன், அண்ணாமலை நகர் நிர்வாகிகள் ஆறுமுகம், மனோகரன், உத்திராபதி, கருணாகரன், மகளிரணி நிர்வாகிகள் லதா ராஜேந்திரன், பானு, வத்சலா, உஷா, சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெய்வேலி
நெய்வேலி நகர கழகம் சார்பில், வட்டம் 9-இல் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் ரா.ராஜசேகர், நகரச் செயலர் கோவிந்தராஜ், நகர அவைத் தலைவர் வெற்றிவேல், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலர் ராம.உதயகுமார், தலைவர் அபு, பொருளாளர் தேவானந்தன், அலுவலகச் செயலர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
ஒன்றியச் செயலர் ரா.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் டி.பி.கண்ணப்பன், பொருளாளர் முருகையன், துணைச்செயலர் சிவராமகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலர் ஆனந்தபாஸ்கர், பேரூர் முன்னாள் தலைவர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பண்ருட்டி, நான்கு முனை சந்திப்பு அருகே எம்.ஜி.ஆர் சிலைக்கு, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் ம.ப.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாலா பெருமாள், நகரமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கோவிந்தன், ராமதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி திருவதிகையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன் தலைமையில், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் எம்.சி.சம்மந்தம் முன்னிலையில், முன்னாள் தொகுதிச் செயலர் ராமசாமி, நகரச் செயலர் முருகன், தொரப்பாடி பேரூர் செயலர் கனகராஜ், அண்ணாகிராமம் ஒன்றியச்செயலர் என்.டி.கந்தன், பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயலர் அர்ச்சுனன், நெல்லிக்குப்பம் பொதுக்குழு உறுப்பினர் டி.காசிநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், முன்னாள் மாநில இலக்கிய அணி துணைச் செயலர் நத்தம் கோபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஊர்வலமாகச் சென்று பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர்,  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பண்ருட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகரச் செயலர் பி.சக்திவேல் தலைமையில், அவைத் தலைவர் வி.ஏ.ஆர்.குமார், பொருளாளர் ஆண்ட்ரூபால், மாவட்ட இலக்கிய அணி செயலர் கலைவாணன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச்  செயலர் செல்வமணி, அம்மா பேரவை துணைச் செயலர் டி.கே.பத்மநாபன், நகர அம்மா பேரவைச் செயலர் வெங்கடேசன் உள்ளிட்ட 
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com