சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் அரசுப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்க  வளாகத்தில் வருகிற பிப்.19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.  
  கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
  எனவே, கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில், 
  "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு' என குறிப்பிட்டு 31.01.2019-ஆம் தேதிக்குள், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோஅனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai