மாரியம்மன் கோயிலில் பாரிவேட்டை திருவிழா

பண்ருட்டி அருகே நல்லூர்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயிலில் பாரிவேட்டை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி அருகே நல்லூர்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயிலில் பாரிவேட்டை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஊரல் கரையிலிருந்து அலங்காரம் செய்யப்பட்டு நல்லூர்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டு பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் சாமி, அம்பாள், குறவன், குறத்தி, புலி, சிங்கம் உள்ளிட்ட வேடமணிந்து நடனமாடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 
விழாவில் ஒறையூர், பலாப்பட்டு, நத்தம், ரெட்டிக்குப்பம், அவியனூர், பைத்தாம்பாடி, காவனூர், வாணியம்பாளையம், சின்னப்பேட்டை, வரிஞ்சிப்பாக்கம், திருத்துறையூர், பனப்பாக்கம், புதுப்பேட்டை, பண்டரக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாண வேடிக்கையுடன் விநாயகர், பாலமுருகன், அய்யனார்,  மாரியம்மன் உற்சவ மூர்த்திகள்  ஊர்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com