சுடச்சுட

  


  பண்ருட்டி ஒன்றியம், தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளை அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு எஸ்.சண்முகவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஏ.பாபு, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை முன்னிலை வகித்தனர். 
  கூட்டத்தில் சங்கத் தலைவராக எஸ்.தேவர், செயலராக பி.ராஜ்மோகன், பொருளாளராக என்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக எஸ்.சண்முகவேல், என்.தமிழழகன், எஸ்.வினோத்குமார், துணைச் செயலர்களாக எம்.வினோத், வி.வசந்தவேல், ஜெ.சூரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  கூட்டத்தில், தெற்குமேல்மாம்பட்டு காலனியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலையை சிமென்ட் சாலையாக அமைக்க வேண்டும். பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். 200 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai