சுடச்சுட

  

  அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் 41-ஆவது மாநாடு வடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  மாநாட்டுக்கு திருகண்டீஸ்வரம் பிரம்மஸ்ரீ சாது சிவராம அடிகளார் தலைமை வகித்தார். அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்க பொதுச் செயலர் கோ.கருணாமூர்த்தி வரவேற்றார். கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜி.தனபால், தமிழ்நாடு சித்த வைத்தியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இயக்குநர் ஆ.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கப் பொருளாளர் என்.ரவி, இணைச் செயலர் கே.சிவகுமார் ஆகியோர் மாநாட்டு தொடக்கவுரை நிகழ்த்தினர். 
  சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான என்.வைத்தியநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் சித்த மருத்துவ புத்தகத்தை கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார் . மாநாட்டில்,  சித்த வைத்திய மருந்துகள் தொடர்பான கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. எஸ்.பாண்டியன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai