சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே கட்டட பணியின்போது பள்ளத்தில் விழுந்து காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
   பண்ருட்டி அருகே உள்ள சித்திரைச்சாவடி, சாலைத் தெருவில் வசித்து வந்தவர் முருகன் (48), கட்டட தொழிலாளி. இவர், கடந்த 11-ஆம் தேதி காமராஜ் நகரில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டார். அப்போது, சிமென்ட் மூட்டையை தூக்கிச் சென்றவர் பலகை முறிந்ததில், கழிப்பறைக்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். இதையடுத்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி 
  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai