சுடச்சுட

  

  மாநில குத்துச் சண்டைப் போட்டி: கடலூர் மாணவர்கள் சிறப்பிடம்

  By DIN  |   Published on : 21st January 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் கடலூர் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
  திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடலூர் துறைமுகம் தூய.தாவீது மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.யோகேஷ் ஆல்பர்ட் கிறிஸ்டிராஜ், எஸ்.அன்புமணி, எஸ்.பிரதோஷ்குமரன், எஸ்.தினேஷ் ஆகியோர் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். 
  இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
  பள்ளித் தாளாளர் இசட்.ஞானக்கண் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பி.பால்சாமுவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.ஹுபர்ரெஜினால்டு, ஆர்.ஆனந்தராஜ் ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஆறுமுகம் வரவேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai