போராட்டமின்றி வாழ்க்கையில் முன்னேற்றமில்லை: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. பதிவாளர்

போராட்டமின்றி வாழ்க்கையில் முன்னேற்றமில்லை என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர்  எஸ்.சந்தோஷ்பாபு கூறினார்.

போராட்டமின்றி வாழ்க்கையில் முன்னேற்றமில்லை என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர்  எஸ்.சந்தோஷ்பாபு கூறினார்.
கடலூரில் உள்ள புனித வளனார் கலை, அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலர் அருள்தந்தை ஜா.பீட்டர் ராஜேந்திரம் தலைமை வகித்தார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர்  எஸ்.சந்தோஷ்பாபு,  புதுவை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் என்.கே.குமரேசன்ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று 1,274 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர். 
விழாவில் பதிவாளர் எஸ்.சந்தோஷ்பாபு பேசியதாவது: போராட்டமின்றி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியாது. தோல்வி அடைந்தவர்கள், அதை வெற்றிக்கான படிக்கற்களாகக் கருதவேண்டும். ஒவ்வொருவரும் அவரவருக்கான  பணியை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும். ஏற்கெனவே பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் படித்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். அதுவே அவர்களுடைய சிறந்த பணியாகும் என்றார் அவர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் எஸ்.சின்னப்பன் வரவேற்று, கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். துணை முதல்வர் எம்.அருமைச்செல்வம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.மரியஆரோக்கியநாதன், கல்லூரியின் கல்விப் புல முதன்மையர் அருள்தந்தை எஸ்.சேவியர், பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com