வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வங்கி காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடலூரில்

வங்கி காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடலூரில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியன் வங்கியில் பணிபுரியும் தற்காலிக கடைநிலை ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் இதேப் பணியில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கும் சட்டப்படியான ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 
காலியாக உள்ள எழுத்தர், கடைநிலை ஊழியர், துப்புரவாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 
ஊழியர்களின் வேலைப் பளுவை அதிகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கடலூர் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இவர்கள் காலை முதல் மதியம் வரை பட்டினியாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் கடலூர்  மண்டல ஆலோசகர் வி.சுப்புராமன் தலைமை வகித்தார். 
மண்டலச் செயலர் ஏ.அரியசெல்வம் முன்னிலை வகித்தார். அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன் தொடக்க உரையும், ஓய்வுபெற்றோர் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் மு.மருதவாணன் நிறைவுரையும் ஆற்றினர். 
பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் டி.புருஷோத்தமன், ஐ.மதியழகன், எல்.அரிகிருஷ்ணன்,  கே.சம்பந்தம் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். நிர்வாகி நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com