சுடச்சுட

  

  வள்ளலார் தெய்வ நிலையத்தில்: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வரிசை ஏற்படுத்தக் கோரிக்கை

  By DIN  |   Published on : 22nd January 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் எளிதாக ஜோதி தரிசனம் 
  செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 
  வடலூரில் வள்ளலார் அமைத்த தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். அப்போது, திரளான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வர். தை மாதம் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். அப்போது, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் கூட்ட நெரிசலில் சென்று ஜோதி தரிசனம் செய்வது கடினம் என்பதால் அவர்கள் எளிதாக ஜோதி தரிசனம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 
  திங்கள்கிழமை ஜோதி தரிசனத்தைக் காண வந்த மாற்றுத் திறனாளி பெண்ணை, உறவினர் ஒருவர் தூக்கி வந்தது அனைவரையும் நெகிழச் செய்தது. இதேபோல முதியவர்களும் கூட்ட நெரிசலால் சிரமத்துக்குள்ளாகினர். எனவே, இனிவரும் காலங்களில் இவர்களுக்காக சிறப்பு வரிசைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai