அண்ணாமலைப் பல்கலை.யில் பல் மருத்துவ கல்வியியல் நிகழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, வாய்நோய் நுண்குறியியல் துறை சார்பில், "வாய்ப் புற்றுநோயால் ஏற்படும் அசெளகரியத்தில் ஆராய்ச்சி முன்னுரிமைகள்'  என்ற தலைப்பில்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, வாய்நோய் நுண்குறியியல் துறை சார்பில், "வாய்ப் புற்றுநோயால் ஏற்படும் அசெளகரியத்தில் ஆராய்ச்சி முன்னுரிமைகள்'  என்ற தலைப்பில் மருத்துவ கல்வியியல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் ஹை-டெக் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பதிவாளர் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடக்கவுரை ஆற்றினார். அவர் பேசியதாவது: புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் சென்றடைந்தால் மட்டுமே அந்த  நோயின் தாக்கம் குறையும் என்றார். புலமுதல்வர் ராஜசிகாமணி முதன்மை உரை ஆற்றினார். 
துறைத் தலைவர் மாதவன் நிர்மல் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டி.ஆர்.சரஸ்வதி, ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். செந்தில்குமார், நதீம், சுனில், சிவக்குமார், ராகேஷ், குருராஜ், தமிழ்ச்செல்வன், பிரதிபா மற்றும் பல்மருத்துவ துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
இந்த நிகழ்ச்சியின் முன்னோடியாக தமிழ்நாடு, கேரளம் மாநில கல்லூரிகளில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, புற்றுநோயை கண்டறிய பயன்படும் மூலக்கூறுகள் குறித்த விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் இருமாநில  பல் மருத்துவத் துறை வல்லுநர்களின் விரைவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.முரளி நாயுடு நன்றி கூறினார். ஏற்பாடுகளை தாமரை, அம்சா, நாசர், அருள், தீபா, கல்யாணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com