சுடச்சுட

  

  தமிழக விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மணல் தட்டுப்பாடு, மணல் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  கட்டடத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.எம்.வேலு தலைமை வகித்தார்.
  மாவட்ட பொருளாளர் துரை.ஜோதிவேலு, நகரத் தலைவர் பி.தண்டபாணி, நகரச் செயலர் எஸ்.செல்வமுருகன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பொன்.குமார் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன 
  உரையாற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai