சுடச்சுட

  

  முப்படை நலத் துறைக்கு தனி இயக்குநரை நியமிக்க நடவடிக்கை

  By DIN  |   Published on : 23rd January 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் முப்படை நலத் துறைக்கு தனியாக இயக்குநரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி உறுதி அளித்தார்.
  புதுச்சேரி கருவடிகுப்பத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களின் லீக் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், முன்னாள் ராணுவத்தினருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய
  தாவது:
  புதுவையில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு  வழங்கப்பட்டு வருகிறது.  முப்படை நலத் துறைக்கு தனி இயக்குநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
  முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்-  அமைப்புக்கு அலுவலகம் அமைப்பதற்கான இடம் அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இங்கு,  9 கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டுள்ளன.   அதில், ராணுவ வீரர்கள் இறந்தால்  ஈமச்சடங்கு நிதி உயர்த்தி வழங்கப்படும்.  
  இலவச மனைப் பட்டா,  25 பணியிடங்களுக்கான பணி ஆணை வழங்குவது தொடர்பாக  அமைச்சர் கமலக்கண்ணனுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
  ஓய்வூதியத்தொகையை உயர்த்தி வழங்குவது பற்றி முடிவு செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.  அதற்கு சில காலதாமதம் ஏற்படும். 
  புதுவைக்கு மத்தியில் இருந்து கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்கவில்லை.  வணிக வரி, கலால் துறை மூலம்தான் வருவாய் கிடைக்கிறது. 
  ஆனால், பல துறைகள் மூலம் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.  முன்னாள் ராணுவ வீரர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு தயாராக உள்ளது என்றார் நாராயணசாமி.
  முன்னதாக சங்க பொதுச் செயலாளர் ஜோதிகுமார் வரவேற்றார்.  அமைச்சர் கமலக்கண்ணன்,  பேரவை துணைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   நிகழ்ச்சியில், இந்திய முன்னாள் ராணுவ வீரர்களின் லீக் தலைமை தலைவர் பிரிகேடியர் கர்த்தார் சிங்,  லெப்டினென்ட் சட்டர்ஜி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
  முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai