சுடச்சுட

  

  இந்து முன்னணியின் கடலூர் நகரம், ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். நகர ஒருங்கிணைப்பாளர் பி.மகாராஜன், ஒன்றியத் தலைவர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் அ.வா.சனில்குமார் சிறப்புரையாற்றினார்.
  கூட்டத்தில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும். குடிகாடு கிராமம் அருகே கோயில் குளங்களைப் பாழ்படுத்தும் ரசாயன ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கடலூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வெளிமாநில, வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தரகர்களின் துணையுடன் போலியான திருமண பதிவு நடைபெறுகிறது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் நிர்வாகிகள் பி.ரவி, பி.சரவணன், கே.பிரகாஷ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சி.நாகராஜ், ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றியப் பொதுச் செயலர் ஆர்.காசிநாதன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai