சுடச்சுட

  

  கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியன்  வங்கி ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.முருகேசன் தலைமை வகித்தார். வங்கி ஓய்வூதியர்கள் சங்க கெளரவத் தலைவர் கே.திருமலை முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உதவிச் செயலர் ஆர்.குருபிரசாத், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மீரா, எஸ்.ராஜேந்திரன், உதவித் தலைவர் ஆர்.கலியபெருமாள் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
  ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் வங்கியில் போதுமான ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஊழியர்கள் பணியட மாறுதல்களை ஒப்பந்த கண்ணியத்தை மீறாமல் செயல்படுத்த வேண்டும். தற்காலிகப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai