மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கான இல்லம் தொடங்க அழைப்பு

கடலூர் மாவட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் தொடங்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன் வரலாம். 

கடலூர் மாவட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் தொடங்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன் வரலாம். 
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முறையாகப் பதிவு பெற்ற, போதுமான அளவு கட்டட வசதி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்று வர ஏதுவான கட்டடமாக இருத்தல் வேண்டும். போதுமான அளவு பணியாளர்கள்,  மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமாகவும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாவும் இருத்தல் அவசியம்.
இத்தகைய தகுதிகள் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பப் படிவத்துடன், தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள், பதிவு விவரங்கள், நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் வருகிற 31- ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக முகவரிக்கு விண்ணபிக்கலாம் என மாவட்ட செய்தி -மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com