சுடச்சுட

  

  சிதம்பரம் தி மெட்ரிக் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
   விழாவில், பள்ளி தாளாளர் மகேஷ் வரவேற்றார். பள்ளி முதல்வர் கவிதா மகேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இ.கிருஷ்ணவேணி பங்கேற்று, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை நிதி ஒதுக்கீடு கமிட்டி உறுப்பினர் தில்லை சீனு, பெண் குழந்தைக்கான கல்வியின் அவசியம் குறித்தும் கருத்துரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
   விழாவில் தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியர் திவ்யா, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் ரம்யா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai