சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே உள்ள மடுவங்கரை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
   முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் ஹரிதாஸ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் அசோகன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், 24 பேருக்கு உள்பிரிவு பட்டா மாறுதல், 42 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 35 பேருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நலத் திட்ட உதவிகள், வேளாண் துறை, தோட்டகலைத் துறை ஆகியவை சார்பில், 8 பேருக்கு நலத் திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 5 பேருக்கு சலவைப் பெட்டி என 114 பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சத்து, 77 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
   முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், தங்கம் உள்ளிட்ட அரசின் அனைத்துத் துறை அலுவலர்கள், மாவட்ட குழு முன்னாள் உறுப்பினர் சிவ.சிங்காரவேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai