சுடச்சுட

  

  பரங்கிப்பேட்டை ஒன்றியம், தில்லைவிடங்கன் ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் அண்மையில் ஆய்வு செய்தார்.
   பின்னர் அவர் கூறியதாவது: சிதம்பரம் தொகுதிக்குள்பட்ட தில்லைவிடங்கன் ஊராட்சி மக்கள், ஜமாத் நிர்வாகிகள் தங்களது குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு அமைத்துத் தரக் கோரி என்னிடம் மனு அளித்தனர்.
   இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். இதையடுத்து, தில்லைவிடங்கன் ஊராட்சி, மேலச்சாவடி பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு, மோட்டார் அமைக்க ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
   இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன் என்றார் அவர்.
   ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அதிமுக ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் செந்தில்குமார், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் சிவ.சிங்காரவேலு, நிர்வாகிகள் ஜெயசீலன், வீராசாமி, கருணாநிதி, கணேசன், ஜமாத் நிர்வாகிகள் சிராஜுதீன், ராஜமுகமது, நாசர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், தங்கம், ஒன்றிய பொறியாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai