சுடச்சுட

  

  பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அனுக்ஞை, கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, நவக்கிரஹ பூஜைகளும், மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம், முதற்கால பூஜை ஆகியவையும் நடைபெற்றன.
   24-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 2-ஆம் கால பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனையும், மாலை 6 மணியளவில் 3-ஆம் கால பூஜை, தமிழ்வேத திருமுறை பாராயணம், யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 4-ஆம் கால பூஜை, நாடிசந்தானம், மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
   தொடர்ந்து காலை 7.30 மணியளவில் அய்யனார் கோயிலிலும், 8 மணியளவில் பிடாரி அம்மன் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
   காலை 9.45 மணியளவில் முத்துமாரியம்மன் கோயில் விமானம் (படம்), முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai