சுடச்சுட

  

  தமிழ்நாடு ஊராட்சி கிராம குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நன்றி அறிவிப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு, பண்ருட்டி ஒன்றியத் தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.சாமிதுரை, பொருளாளர் வை.பரமசிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.முருகன், மாவட்டத் துணைச் செயலர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளர்களாக் கலந்துகொண்டனர்.
   மாநிலத் தலைவர் எஸ்.ராமர் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஒன்றிய கெüரவத் தலைவர் பெ.ஆனந்ததுரை பேரூரை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai