சுடச்சுட

  

  சிதம்பரத்தில் வருவாய்த் துறை தேர்தல் பிரிவு சார்பில் 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   வடக்குரத வீதி நகராட்சி பள்ளி அருகிலிருந்து இந்தப் பேரணியை சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஹரிதாஸ், தேர்தல் துணை வட்டாட்சியர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   பேரணியில் ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ளு வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மேலரதவீதி கஞ்சித்தொட்டி அருகே பேரணி முடிவுற்றது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai