சுடச்சுட

  

  ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் கடலூரில் மாவட்ட மைய நூலக அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சந்திரபாபு தலைமை வகித்தார்.
   மாவட்ட துணைத் தலைவர் தா.வைரமணி, மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.அருள், மாவட்ட இணைச் செயலர் பெ.சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் ரா.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்க மாவட்ட தலைவர் சாமி.செங்கேணி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
   மாவட்ட துணைத் தலைவர் பழ.முருகபாண்டியன், மாவட்ட பொருளாளர் ப.தாகூர் ஆகியோர் பேசினர். வட்டத் தலைவர் ரா.லட்சுமிகாந்தன், மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் கோ.ராஜேந்திரன், மகளிரணி செயலர் பா.தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai