சுடச்சுட

  

  வீரவணக்க நாள்: மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மரியாதை

  By DIN  |   Published on : 26th January 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வீரவணக்க நாளை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
   கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் அதிமுகவினர் சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி, மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மா.சந்திரகாசி எம்பி, எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், நாக.முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகரச் செயலர் ரா.செந்தில்குமார், மாவட்ட பாசறை செலர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   திமுக சார்பில் காந்தி சிலையிலிருந்து நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் ஊர்வலமாக வந்து, தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் குமராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.மாமல்லன், புவனகிரி ஒன்றியச் செயலர் மனோகரன், நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், ராஜேந்திரக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், ரா.வெங்கடேசன், நகர பொருளாளர் ஜாபர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செய்தித் தொடர்பாளர் பெரு.திருவரசு தலைமையில் ஊர்வலமாக வந்து தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். கடலூர் தெற்கு மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் ஊர்வலமாக வந்து ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டச் செயலர் ஏ.என்.குணசேகரன் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். இதேபோல, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஊர்வலமாக வந்தனர். ராஜேந்திரன் சிலைக்கு மாநிலத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் மாலை அணிவித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai