சுடச்சுட

  

  கால்பந்து போட்டியில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு

  By DIN  |   Published on : 27th January 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மாநில கால்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
  என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஜவஹர் கல்விக் கழகத்தின்கீழ் நெய்வேலி வட்டம் 28-இல் மாதிரி ஜவஹர் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி மாணவர்கள் நகுல், கவின்ராஜ், ஜோயல், சஞ்சய்ஸ்ரீ, நிஷிதரன், பிரவீன் ஆகியோர் கோவை நேஷனல் ஸ்போர்ட்ஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 8-வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 50 அணிகள் இடம் பெற்றன. இதில் சிறந்த ஆட்டக்காரராக மாணவர் நகுல் தேர்வு செய்யப்பட்டார். 
  இந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் பழனியம்மாள் தலைமை வகித்தார். 
  மாதிரி ஜவஹர் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், உடல் கல்வி ஆசிரியர் பீமாராவ் ராம்ஜி, பயிற்சியாளர் ரவீந்திரன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai