சுடச்சுட

  


  வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் 148-ஆம் ஆண்டு தைப்பூச விழா அண்மையில் நடைபெற்றது.
  வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. 2-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு, சுத்த சன்மார்க்க நிலைய செயலர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். மேட்டுக்குப்பம் சன்மார்க்க சங்கத் தலைவர் ஞானதுரை வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய செயற்குழு உறுப்பினர் சி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மானுடம் பெற்ற அறக்கொடை என்ற தலைப்பில் எழுத்தாளர் பொன்.தமிழ்மணியும், வள்ளலாரின் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் திருவெண்காடு சன்மார்க்க சங்கத் தலைவர் ஜெய.ராஜமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
  3-ஆம் நாள் நிகழ்ச்சியில் வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை வகித்துப் பேசினார். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம் வரவேற்றார். வடலூர் கருணை இல்லம் நிர்வாகச் செயலர் ஏ.ஆர்.சுப்பிரமணியம், சுத்த சன்மார்க்க நிலையப் பொருளாளர் பூ.ஆசைதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள்கவியும், அமரகவியும் என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதியும், அகவல் தரும் தகவல் என்ற தலைப்பில் ஆபத்தாரணபுரம் கு.நந்தகோபால் ஆகியோர் பேசினர்.
  விழாவின் 4-ஆம் நாள் அன்று அருள்பெருஞ்ஜோதி லட்சார்ச்சனை நடந்தது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(ஓய்வு) டி.ஜெயபால் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம் முன்னிலை வகித்தார். கருணை இல்லம் சரோஜிணி அம்மாள் வரவேற்றார். வாழ்விக்க வந்த வள்ளல் என்ற தலைப்பில் திருப்பூர் சன்மார்க்க சங்கச் செயலர் நீறணி பவளக்குன்றன் சிறப்புரை ஆற்றினார். இவருக்கு, ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் நினைவுப் பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஆர்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை ஆற்றினார். ஓபிஆர் கல்வி நிறுவன கல்வியியல் கல்லூரி முதல்வர் பொன்மொழி சுரேஷ், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பி.கோமதி, கலைக் கல்லூரி முதல்வர் சு.கவிதாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதாராஜா வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai