சுடச்சுட

    

    விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 32 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 27th January 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களில் ஈடுபட்ட 32 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக 20 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவித்துள்ளார். 
    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்: உளுந்தாண்டார்கோவில் தலைமை ஆசிரியர் ராமதாஸ், காட்டுஎடையார் பள்ளி ஆசிரியர் லாரன்ஸ், பாலப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்மூசா, தேவனூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பரமசிவம், விட்டலாபுரம் பள்ளி ஆசிரியர் வீரமணி, கரசானூர் பள்ளி ஆசிரியர் துளசிங்கம், தொரவி பள்ளித் தலைமை ஆசிரியர் செல்லையா, வனவரெட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் ரகீம், நீலமங்கலம் பள்ளி ஆசிரியர் சீனுவாசன், அனைக்கரைக்கொட்டாலம் பள்ளி ஆசிரியர் ஏழுமலை, கள்ளக்குறிச்சி மகளிர் பள்ளி ஆசிரியர் அண்ணாதுரை, ரிஷிவந்தியம் பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி, வேங்கைவாடி பள்ளி ஆசிரியர் வேல்முருகன், தலைமை ஆசிரியர் சாமிதுரை, சின்னமணியந்தல் பள்ளி ஆசிரியர் ஷேக் ஜாகீர்உசேன், சிறுவள்ளிக்குப்பம் ஆசிரியர் சண்முகசாமி, கட்டளை பள்ளி ஆசிரியர் சுகதேவ், செம்மேடு பள்ளி ஆசிரியர் திருலோகசுந்தர், வழுதரெட்டி பள்ளி ஆசிரியர் ஜெயநந்தம், சி.என்.பாளையம் பள்ளி ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    கடலூர்: இதேபோல, கடலூர் மாவட்டத்தில் 12 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 
    கா.பழனிச்சாமி தெரிவித்தார். 
    இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அளவில் 4 ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அளவில் 8 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai