விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 41 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களில் ஈடுபட்ட 41

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களில் ஈடுபட்ட 41 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக 20 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவித்துள்ளார். 
உளுந்தாண்டார்கோவில் தலைமை ஆசிரியர் ராமதாஸ், காட்டுஎடையார் பள்ளி ஆசிரியர் லாரன்ஸ், பாலப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்மூசா, தேவனூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பரமசிவம், விட்டலாபுரம் பள்ளி ஆசிரியர் வீரமணி, கரசானூர் பள்ளி ஆசிரியர் துளசிங்கம், தொரவி பள்ளித் தலைமை ஆசிரியர் செல்லையா, வனவரெட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் ரகீம், நீலமங்கலம் பள்ளி ஆசிரியர் சீனுவாசன், அனைக்கரைக்கொட்டாலம் பள்ளி ஆசிரியர் ஏழுமலை, கள்ளக்குறிச்சி மகளிர் பள்ளி ஆசிரியர் அண்ணாதுரை, ரிஷிவந்தியம் பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி, வேங்கைவாடி பள்ளி ஆசிரியர் வேல்முருகன், தலைமை ஆசிரியர் சாமிதுரை, சின்னமணியந்தல் பள்ளி ஆசிரியர் ஷேக் ஜாகீர்உசேன், சிறுவள்ளிக்குப்பம் ஆசிரியர் சண்முகசாமி, கட்டளை பள்ளி ஆசிரியர் சுகதேவ், செம்மேடு பள்ளி ஆசிரியர் திருலோகசுந்தர், வழுதரெட்டி பள்ளி ஆசிரியர் ஜெயநந்தம், சி.என்.பாளையம் பள்ளி ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்: இதேபோல, கடலூர் மாவட்டத்தில் 12 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 
கா.பழனிச்சாமி தெரிவித்தார். 
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com