Enable Javscript for better performance
ஆசிரியர்கள் பணிக்கு திரும்பக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் பணிக்கு திரும்பக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 28th January 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீண்டும் பணிக்கு திரும்ப வலியுறுத்தி, வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாய சங்கத்தினர் திட்டக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் தயா.பேரின்பம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வேறு வடிவத்துக்கு மாற்ற வேண்டும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. நிர்வாகிகள் சி.பழனிசாமி, பாண்டுரெங்கன், பாலமுருகன், லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai