சுடச்சுட

  

   

  தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டுக்கு,  மாநிலத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, பொதுச்செயலர் இ. முகம்மது, மேலாண்மைக் குழுத் தலைவர் எம்.எஸ். சுலைமான், மேலாண்மைக் குழு உறுப்பினர் கே.எம். அப்துல் நஸீர், மாநிலச் செயலர் ஆர். அப்துல் கரீம், பேச்சாளர்கள் ஆர். ரஹ்மத்துல்லா, எம்.ஐ. சுலைமான், கே.எஸ். அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் கே. சித்திக் உள்ளிட்ட பலர் பேசினர்.
  முத்தலாக் தடைச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகம், புதுவையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை கூடுதலாக்க வேண்டும். இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai