சுடச்சுட

  

  கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
   வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர், தேசிய மாணவர் படை, சாரணர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தலைமை ஆசிரியர் எஸ்.இளங்கோவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வே.ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
   பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் காவல் ஆய்வாளர் மலர்விழி தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளித் தாளாளர் கிருபாகரன் தலைமை வகித்தார்.
   வடலூர், கருங்குழி ஏரிஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினர் ஏ.சுரேகா அறிவழகன் தேசியக்கொடியை ஏற்றினார். கல்விக்குழும தலைவர் சி.டி.அறிவழகன் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எல்.கணேசன் வரவேற்றார். கலைக் கல்லூரி முதல்வர் எஸ்.தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
   குறிஞ்சிப்பாடி, எல்லப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக் கல்விக்குழு தலைவர் மணி தேசியக்கொடியை ஏற்றினார். தலைமை ஆசிரியர் தமிழ்திலகம் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சகிலாமேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ராயப்பன் நன்றி கூறினார்.
   வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆசிரியர் எம்.சதீஷ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணி, பொருளாளர் ரகோத்தமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர் வி.வசந்த் தேசியக்கொடியை ஏற்றினார். 10-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆனந்தலட்சுமியின் பெற்றோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
   பெண்ணாடம் ஜெயசக்தி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ புரட்சிமணி முன்னிலை வகித்தார். மருத்துவர் மணிமேகலை தேசியக்கொடியை ஏற்றினார். தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தேசியக்கொடியை ஏற்றினார்.
   நெய்வேலி, குறவன்குப்பத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் ஜேபிஏ பள்ளி நிறுவனர் பாண்டியன், அரிமா சங்க மாவட்டத் தலைவர் லட்சுமிநாராயணன் ஆகியோர் இணைந்து தேசியக்கொடியை ஏற்றினர். பள்ளி தாளாளர் சகாயராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சகாய பாக்கியம் வரவேற்றார்.
   காட்டுக்கூடலூர் கனி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேவராஜ் தேசியக்கொடியை ஏற்றினார். தாளாளர் ரா.சஞ்சீவிராயர் தலைமை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரா.கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கினார். ஆசிரியை ரஞ்சினி நன்றி கூறினார்.
   நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி துணைச் செயலர் மதிவாணன் தேசியக்கொடியை ஏற்றினார். கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவர் தேசியக்கொடியை ஏற்றினார். தாளாளர் ஆர்.சேரன் தலைமை வகித்தார். முதல்வர் எஸ்.சரவணன், துணை முதல்வர் எஸ்.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   பண்ருட்டி நகராட்சி அலுவலகம்: பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, நகராட்சி ஆணையர் (பொ) வெங்கடாஜலம் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றினார். துப்புரவு அலுவலர் டி.சக்திவேல், பணி ஆய்வாளர் சாம்பசிவம், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி சங்க நிர்வாகி சண்முகம், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கோதண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி தேசியக்கொடியை ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கே.குமரன் முன்னிலை வகித்தார். அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai