சுடச்சுட

  

  பூண்டியாங்குப்பம் அருகே சாலையில் சென்ற காரில் தீடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
   சிதம்பரம் அருகே உள்ள மேலமணக்குடியைச் சேர்ந்தவர் ரா.செந்தாமரை என்ற கண்ணன் (38). இவர் தனது காரில் ஞாயிற்றுக்கிழமை கடலூருக்கு வந்துகொண்டிருந்தார். பூண்டியாங்குப்பம் அருகே வந்தபோது, கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், காரை நிறுத்திய கண்ணன் அதிலிருந்து உடனடியாக கீழே இறங்கி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும், கார் முழுவதுமாக எரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai