முத்தமிழ் சங்க விழா

கடலூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தை மாத விழா கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கடலூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தை மாத விழா கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு, சங்கத் தலைவர் காரை.பழ.ஆறுமுகம் தலைமை வகிக்க, சிறப்புத் தலைவர் க.காத்தப்பனார், நெறியாளர் க.எழிலேந்தி, செய்தித் தொடர்பாளர் செ.அனந்தகிருட்டிணன், அமைப்புச் செயலர் சமுனாரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்துக்கு புதுவை குமார் தலைமை வகித்தார். கூட்டல் தலைப்பில் இரா.கிருட்டிணமூர்த்தி, கழித்தல் தலைப்பில் த.சோ.அரி, வகுத்தல் தலைப்பில் பா.தினேஷ்கர், பெருக்கல் தலைப்பில் மணி.வினோத்குமார் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
 சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனின், "சொக்காவின் மீது பனிப்பொழிவு' என்ற நூல் குறித்து மருத்துவர் சு.சரத்குமார் நூல் ஆய்வு செய்தார். அரங்க ஆளுகையை பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரமூர்த்தி செய்தார். சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (படம்).
 முன்னதாக, பொருளாளர் சு.ராசு வரவேற்க, துணைச் செயலர் ந.ரவி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com