சுடச்சுட

  

  சுவாமி சகஜானந்தாவின் 129-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சிதம்பரம் அம்மாபேட்டையில் உள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
   நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்பி ஏ.முருகேசன், நகரச் செயலர் ரா.செந்தில்குமார், ஒன்றியச் செயலர்கள் அசோகன், சிவப்பிரகாசம், முன்னாள் நகரச் செயலர் கே.கலியபெருமாள், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லை கோபி, ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் விநாயகம், முன்னாள் ஒன்றிய கழகச் செயலர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் வீரமணி, ஏசுராஜ், தில்லை சேகர், வழக்குரைஞர் வேணு புவனேஸ்வரன், நாகராஜன், ஜெயசீலன், கார்த்திகேயன், செல்வரங்கம், சக்திவேல், உமாசங்கர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட கே.ஏ.பாண்டியன், அங்குள்ள சுவாமி சகஜானந்தா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai