சுடச்சுட

  

  கடலூர் ஆலப்பாக்கத்தில் சைவ சித்தாந்த நெறி மன்றம் சார்பில், ஸ்ரீபுனிதவல்லி சமேத ஸ்ரீபுஜண்டேஸ்வரசுவாமி ஆலயத்தின் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா, தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
   விழாவில், உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் ரா.முத்துக்குமரனார் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரது ஆன்மிகம், தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ்வேந்தர் விருது வழங்கப்பட்டது. கலை இலக்கிய பணிக்காக வைகாசி சிவாஜிக்கு கலை இலக்கிய செம்மல் விருதும், திருக்குறள் ஆய்வுப் பணிக்காக கோவை எம்.விஜயலட்சுமிக்கு வெற்றிச்சுடரொளி விருதும், திருப்பணித் தொண்டுக்காக வி.சக்திவேல் சிவாச்சாரியாருக்கு சர்வ சாதக சாம்ராட் விருதும் வழங்கப்பட்டது.
   இந்த விருதுகளை சைவ சித்தாந்த நெறி மன்ற அமைப்பாளர் எல்.ராஜாராமன் வழங்கினார். தொடர்ந்து, உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai