சுடச்சுட

  

  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கோரி ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
   அரசுப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும். வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
   சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை, குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.
   தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
   போராட்டத்துக்கு மாவட்ட செயலர் டி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் த.தமிழ்மணி, ஒன்றியச் செயலர் பாபு, ஒன்றிய தலைவர் டேனியல், நகரத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai