சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
   மௌண்ட் லிரோசி பள்ளி சார்பில், கடலூர் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
   இதில், பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாணவர் என்.ராமச்சந்திரன் 5 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்து ரூ.3,000 பரிசுத் தொகையை பெற்றார். இந்தப்பள்ளி மாணவர் எல்.கலாநிதி 12 வயது பிரிவில் இரண்டாமிடம் பிடித்து ரூ.2,000 பரிசுத் தொகையை பெற்றார். இதையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ரத்தனா பள்ளி மாணவர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார்.
   இந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி ஆகியோர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் என்.ராமச்சந்திரன், எல்.கலாநிதி ஆகியோரை பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai