சுடச்சுட

  

  புதுப்பேட்டை-பனப்பாக்கம் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டையில் இருந்து பனப்பாக்கம் வரை செல்லும் சுமார் 2 கி.மீ தொலைவிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
   இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
   இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50 பேர், புதுப்பேட்டை முத்து மாரியம்மன் கோவில் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீஸார், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, உதவி பொறியாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   அப்போது, சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் உரம், விவசாய விளைபொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதாகவும், அவசரகால ஊர்திகள்கூட வர முடியாத நிலை உள்ளதாகவும், விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறினர்.
   இதையடுத்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.39.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
   விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனத் தெரிவித்தார்.
   இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai