சுடச்சுட

  

  சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சிதம்பரம் வட்டக் குழு சார்பில், "எங்கே என் வேலை எனக் கேட்டு' மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
   மேலவீதி கஞ்சித் தொட்டி அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்க மாநிலத் தலைவர் தலைவர் ரெஜிஸ்குமார், மாவட்டத் தலைவர் லெனின், துணைத் தலைவர் ஆழ்வார், புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதீஷ், பொருளாளர் ஸ்டாலின், கீரை பாளையம் ஒன்றியச் செயலாளர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை கொடு அல்லது அவர்களுக்கு நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.
   அரசாணை 56-ஐ ரத்து செய், மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களைக் கொண்டு தொழில்சாலைகளை நிறுவி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடு என கோஷங்களை எழுப்பினர்.
   இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக 52 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai