சுடச்சுட

    

    ஜாக்-ஜியோ கூட்டமைப்பு இன்று முதல்காலவரையற்ற வேலைநிறுத்தம்

    By DIN  |   Published on : 30th January 2019 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஜாக்-ஜியோ கூட்டமைப்பு புதன்கிழமை (ஜன.30) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவருமான கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை (ஜன.30) சென்னையில் கோட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்று மறியல் போராட்டம் நடத்தப் போவதாக சங்கத்தின் மாநில மாநாட்டில் முடிவெடுத்துள்ளோம். 21 சங்கங்கள் இணைந்த ஜாக்-ஜியோ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
    இந்தக் கூட்டமைப்பு இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai