சுடச்சுட

  

  மதுக் கடைகளுக்கு புதன்கிழமை (ஜன.30) விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன.30-ஆம் தேதி (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகள், மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் விற்கப்படாமல் மூடியிருக்கவேண்டும். மேலும், டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் ஹோட்டல் பார்களில் மது விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இதை மீறி மதுக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, மது அருந்தும் கூடங்களை திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் பார் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai