சுடச்சுட

  

  பெரும்பாலானோர் பணிக்குத் திரும்பியதால், கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் வலுவிழந்தது.
   அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
   இந்தப் போராட்ட தொடக்கத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்திலும் அதிகபட்சமாக 2500 பேர் வரை கைதாகினர்.
   இந்த நிலையில், அவர்களது போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தததால் திங்கள்கிழமை 1,460 பேர் கைதாகினர். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் குறைவான அளவிலே பங்கேற்றனர். மேலும், மறியலில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படாத நிலையும் ஏற்படும் என்பதால் செவ்வாய்க்கிழமை ஜாக்டோ-ஜியோவினர் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தினர்.
   இதனால், ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டம் வலுவிழந்து வருவதாகக் கருதப்படுகிறது.
   மேலும், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 30,665 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை 10 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்றனர். பணிக்கு வராத மொத்தம் 3,073 பேரில் ஆசிரியர்கள் 2,260 பேர்களாவர். மற்றத் துறையினர் 813 பேர். திங்கள்கிழமை மொத்தம் பணிக்கு வராதவர்கள் 7,582 பேர்களாவர். இந்த எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளும் பெரும்பாலும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai