சுடச்சுட

  

  விருத்தாசலம் மாவட்டம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 30th January 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
   இதன்படி, வேப்பூரில் விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்துக்கு வேப்பூர் நகர வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சொல்லழகன் தலைமை வகித்தார். உழவர்மன்றத் தலைவர் சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார்.
   திரைப்பட இயக்குநர் வ.கெüதமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
   விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல், விவசாய சங்கத் தலைவர் கார்மங்குடி எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
   ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சி.கதிர்காமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, பாஜக நிர்வாகிகள் எஸ்.செந்தில்குமார், ஜீ.பிரவீன், விசிக நிர்வாகிகள் சந்தோஷ், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   ஆர்ப்பாட்டம் நிறைவில் இயக்குநர் வ.கெüதமன் பேசுகையில், விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அரசு உடனடியாக இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai