செவிலியர் கல்லூரியில் பெண் குழந்தைகள் தினம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 பெண் குழந்தைகள் தின கண்காட்சியை மருத்துவப் புல முதல்வர் டி.ராஜ்குமார் தொடக்கிவைத்தார்.
 கண்காட்சியில் இறுதி ஆண்டு செவிலியர் மாணவ, மாணவிகள் சார்பில், பல்வேறு வகையான விளக்கப் படங்கள், விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
 பெண்களின் ஆரோக்கிய மேம்பாடு, பிறப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தினர். மேலும், அவர்களது சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.
 கண்காட்சியில் தேசிய பெண் குழந்தை தினத்தின் குறிக்கோள்களும், பெண்களின் உரிமைகளும் பொது மக்களுக்கு விவரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தரின் ஆலோசகர் (மருத்துவத் துறை) மருத்துவர் என்.சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.யு.சண்முகம், செவிலியர் கல்லூரி முதல்வர் டி. கரோலின் ராஜகுமார், மருத்துவர்கள் ச.கலாவதி, காந்திமதி, உஷா உள்பட மகப்பேறு பிரிவு செவிலியர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com