சுடச்சுட

  

  நந்தனார் பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

  By DIN  |   Published on : 31st January 2019 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அரசினர் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத் துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
   விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் அசோகன், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லை கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார்.
   விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
   இதேபோல, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.
   நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், வீரமணி, செல்வரங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயராமன், சந்தர்ராமஜெயம், பாஸ்கர், மண்டல ஆதிதிராவிடர் நலத் துணை இயக்குநர் குனசேகரன், உதவி கல்வி அலுவலர் கலிவரதன், வாழ்முனி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai