சுடச்சுட

  

  பிஎஸ்என்எல் அதிவேக பைபர் இணையம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

  By DIN  |   Published on : 31st January 2019 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக பைபர் இணையம் தொடர்பான விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
   கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் கண்ணாடி இழை (பைபர்) கேபிள் வழியாக அதிவேகத்தில் இயங்கும் இணையச் சேவையை நடவடிக்கை எடுத்தது.
   இதற்காக, கடலூர் உள்பட முக்கிய நகரங்களில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டு, கடலூரில் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்கள், வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
   பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு பேரணியைத் தொடக்கி வைத்தார். பேரணி செம்மண்டலத்திலிருந்து தொடங்கி, மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், தேவனாம்பட்டினம் வழியாகச் சென்று பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
   இதுகுறித்து, பொதுமேலாளர் கூறியதாவது: தற்போது வயர் மூலமாக 10 எம்பிபிஎஸ் ( ஙக்ஷல்ள்) வேகத்தில் வழங்கப்பட்டு வரும் இணையச் சேவை, கண்ணாடி கேபிள் இணைப்பு மூலமாக 50 முதல் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும்.
   இதற்காக, ரூ. 777 முதல் ரூ. 16,999 கட்டணம் வரையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில், 500 ஜிபி முதல் 3 ஆயிரம் ஜிபி வரையில் வழங்கப்படுவதுடன், கட்டணமில்லா அழைப்புகளும் வழங்கப்படுகிறது. அதிகமான இணைய வேகம் என்பதால், 5 ஜிக்கு இணையான வேகத்தைப் பெற முடியும் என்றார் அவர்.
   நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர்கள் வெ.சாந்தா, மதுரை, குப்புசாமி உள்ளிட்ட அனைத்துத் தொழில்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai