இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
 கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (48), தொழிலாளி. இவர், கடந்த 2012- ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21- ஆம் தேதி கடலூரிலிருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.
 விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் அருகே சென்ற போது, நின்றிருந்த லாரி மீது மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு இடது, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
 இதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக் கோரி, கடலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். விசாரணை முடிவில் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 2.55 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடலூர் நீதிமன்றம் கடந்த 2014- ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
 ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், கிருஷ்ணமூர்த்தி 2018 -ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.
 இதில் வட்டியுடன் சேர்த்து ரூ. 3.90 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 மேலும், இழப்பீட்டுத் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்காதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், கடலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் மண்டல அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com