தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
 மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய தொழுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால், உடனே அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தொழுநோயை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் அவர்.
 தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணியில் தொழுநோய் ஒழிப்பு துணை இயக்குநர் சித்திரைச்செல்வி, துணை இயக்குநர் (சுகாதாரம்) ஆர்.கீதா, இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் கேசவன், பொருளாளர் முகுந்தன், அரசு மருத்துவர்கள், அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com