பணியாளர்கள் போராட்டம்: வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், புதன்கிழமை அந்த அலுவலகம் மூடப்பட்டிக் கிடந்தது.

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், புதன்கிழமை அந்த அலுவலகம் மூடப்பட்டிக் கிடந்தது.
 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அங்கம் வகித்த ஆசிரியர்கள் பெரும்பாலானோர் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை முதல் பணிக்குத் திரும்பிவிட்டனர்.
 இருப்பினும், அரசு ஊழியர்கள் சங்கங்கள் சில தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் புதன்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனால், வட்டாட்சியர் அலுவலக முதன்மை வாயில் கதவு மூடப்பட்டிருந்தது. அலுவலகத்துக்கு பணியாளர்கள் யாரும் வரவில்லை.
 இதனால், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
 ஆனால், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 127 பணியாளர்களில், 23 பேர் மட்டும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், ஏனைய பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com