கூட்டுறவு சங்க நிதி அளிப்பு
By DIN | Published On : 05th July 2019 08:36 AM | Last Updated : 05th July 2019 08:36 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் - கடன் சங்கம் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ. 2.67 லட்சம் மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 1.78 லட்சம் ஆகியவற்றை அளிக்கும் நிகழ்ச்சி கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாளிடம் சங்கத்தின் தலைவர் எம்.கபில் தேவ் ரூ. 4.45 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர் மு.ஜெகத்ரட்சகன், இணைப் பதிவாளர் அலுவலகக் கண்காணிப்பாளர்கள் டி.ஆர்.வரதராஜன், என்.வடிவேல், சிதம்பரம் சரகக் கூட்டுறவு சார்-பதிவாளர் டி.தமிழரசன், சங்கச் செயலர் டி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.